எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரி கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கேரள அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முடக்கி வருவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி வருகிறார். இதைக் கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் ஜனவரி 12ம் தேதி (நேற்று) ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே போராட்டம் தொடங்கியது. இதில் முகம்மது ரியாஸ், சஜி செரியான், வீணா ஜார்ஜ், ராஜேஷ், ராஜீவ் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரி கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கேரளாவின் வளர்ச்சியை தடுத்து மாநில அரசையும், மக்களின் கழுத்தையும் நெரிக்கிறது. அரசியல் ரீதியாக மத்திய அரசு கேரளாவை பழிவாங்குகிறது. இதைக் கண்டித்துத்தான் போராட்டம் நடைபெற்றதாக முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


