முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

வேலூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 17.9.2023 அன்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும் போது, தி.மு.க.வுக்கும், ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கும் இருந்த தொடர்புகளை குறித்து பேசிக் கொண்டு வரும் போது, வேலூருக்கு பிரச்சாரத்திற்கு வந்த தந்தை பெரியார் மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியை பார்த்த தந்தை பெரியார் மணியம்மையாரை கழகப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். 

எதிர் காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்து விட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார். இது பொருந்தா திருமணம் என்று அண்ணா திராவிட கழகத்திலிருந்து வெளியேறினார். இது தான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். 

இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால்,  அழைத்துக் கொண்டு போனார் என்பதற்கும் கூட்டிக் கொண்டு போனார் என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நாள் உணர்கிறேன். என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர் வீரமணிக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் இடத்திலும், ஆசிரியர் வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியார் அறிவார். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து