முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9,000 கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023 04 10

Source: provided

திருவனந்தபுரம் : வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9 ஆயிரம் கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். 

அதே போல் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் நடக்கும் மாதாந்திர பூஜையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். சபரிமலை வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. 

செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரயில்பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 9ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. 

இந்த திட்டத்தை 2030-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளில் சபரிமலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய பாதை தேவைப்படும். 

ஆகவே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு 2 ஆண்டுகள் ஆகும் என்று ரயில்வே கணக்கிட்டுள்ளது. 

மேலும் புதிய பாதைக்கு நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டால், 3 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் செயல்பட தொடங்கும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து