முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயன்படுத்தாத யு.பி.ஐ.,க்கு டிசம்பர் 31 கடைசி தேதி: என்.பி.சி.ஐ. வழிகாட்டுதல் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2023      இந்தியா      வர்த்தகம்
UPI

புதுடில்லி, ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத யு.பி.ஐ. ஐடிகளை டிச.,31க்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு ஜி பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றி கொள்ளலாம். இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை செய்யாத யு.பி.ஐ..,கள் டிச.,31க்கு பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நமது யு.பி.ஐ. ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ. (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும், ஜி பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், யு.பி.ஐ. ஐடிகள் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் தடை செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் காரணமாக தவறான நபரின் கணக்கில் பணம். மாற்றப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து