முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தல்: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 1,452 பேர்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடெல்லி : ஐந்து மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தெலங்கானாவுக்கு இன்று (நவ. 30) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் 5 மாநிலத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம்பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, மொத்தமுள்ள 8,054 வேட்பாளர்களில் 1,452 வேட்பாளர்கள் (18 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 959 (12 சதவீதம்) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. 22 வேட்பாளர்கள்  தங்கள் மீது கொலை வழக்குகள் இருப்பதாகவும், 82 பேர் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் 107 பேர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் வேட்பாளர்களில் 29 சதவீதம்பேர் (2,371 பேர்) கோடீஸ்வர்கள். இவர்கள் அனைவரும்  ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.36 கோடி.  தெலங்கானாவில்தான் அதிக வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என தெரவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து