முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் பல்கலைக்கழக விடுதியில் திடீர் தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      உலகம்
Iraq 2023-12-09

Source: provided

டெக்ரான் : ஈராக்கில் பல்கலைக் கழக விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விப்தில் 14 பேர் உயிரிழந்தனர். 

ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக் கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து