முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் சமூதாய சமையல்கூடங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி:நாடு முழுவதும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் தேவையான அளவு உணவுப்பொருள் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என சமூதாய சமையல்கூடங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

நாடு முழுவதும் சமுதாய சமையல்கூடம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சில ஆண்டுகளாகவே நடந்து வந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளிடமும் ஆலோசனை செய்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் மாநிலங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பது அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். 

இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது.,  “மேற்கூறிய உத்தரவை தவிர கூடுதலாக எந்த வித உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை என கருதுகிறோம்.  மேலும் சமூதாய சமையல்கூடங்கள் தேவை என்பது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை.  அதேவேளையில் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற உணவு உத்தரவாத திட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்துவதை அவர்களின் விருப்பத்துக்கு அல்லது முடிவுக்கு விட்டுவிடுகிறோம்” இவ்வாறு கூறி வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது என்பது அரசுகளின் அடிப்படை கடமை என இந்த வழக்கின் விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து