முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநில காங் .எம்.பி. பா.ஜ.க.வில் இணைந்தார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

காந்திநகர் : குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரன் ரத்வா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தனது மக்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஏற்கனவே குஜராத்தில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியின தலைவரான நரன் ரத்வா தற்போது பா.ஜ.க.வுக்கு சென்றிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சோட்டோ உதேப்பூரில் பழங்குடியின தலைவரான ரத்வா ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். முதன்முறையாக 1989-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 1991, 1996, 1998 மற்றும் 2004-ல் மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

ரத்வாவின் மகன் 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோட்டா உதேப்பூர் பழங்குடியின தொகுதியில் (ST) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரத்வா ரெயில்வே துணை அமைச்சராக இருந்தவர். 2009-ல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்சின் ரத்வாவிடம் தோல்வியடைந்தார். 

பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டில் தலைமையில் ரத்வான தனது ஆதரவாளர்களும் பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து