முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜூரெல் முன்னேற்றம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

துபாய் : ஐ.சி.சி.யின் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால்.

2 இரட்டை சதங்கள்... 

2023ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்வால் (22 வயது) இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள், 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள் அடங்கும். சராசரி 69.36 ஆகும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால், “டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இடத்தில் இருக்கும்போது நான் எனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும். அதற்காக நான் முயற்சித்து வருகிறேன். நல்ல தொடக்கம் கிடைத்து விளையாட ஆரம்பித்தவுடன் அதனை பெரிய ரன்களாக மாற்ற நான் முயற்சிக்கிறேன். ஏனென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல தொடக்கம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும்” என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஜெய்ஸ்வால், ஜூரல்....

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர். டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். 12வது இடத்தில் ஜெய்ஸ்வால், 13வது இடத்தில் ரோகித் சர்மாவும், 9வது இடத்தில் விராட் கோலியும் இருக்கிறார்கள். முதலிடத்தில் கேன் வில்லியம்சனும் 2வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் இருக்கிறார்கள். கில் 31-வது இடத்திலும் (4-இடம் முன்னேற்றம்) மற்றும் ஜூரெல் 69-வது இடத்திலும் (31 இடம் முன்னேற்றம்) உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்...

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து