முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Rajasthan 2024-03-18

Source: provided

ஜோத்பூர் : ராஜஸ்தானில்  ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

ராஜஸ்தானின் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

விபத்து தொடர்பாக ரயில் பயணிகள் விவரம் அறிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண்ணை  ரயில்வே அறிவித்துள்ளது.  விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அவ்வழியாக சென்ற ரயில்கள் தாமதம் ஆகின. ரயிலின் என்ஜின் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டதாகவும் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.  இந்த ரயில் விபத்து காரணமாக 6 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து