முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Modi

Source: provided

புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். 

இ்க்கூட்டத்தில், தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 

ஒவ்வொரு மத்திய அமைச்சரும் தங்களது துறை செயலாளர்கள் மற்றும் இதர அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும், இந்த செயல்திட்டத்தை எப்படி சிறப்பாக அமல்படுத்துவது என்று அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும்,  பாராளுமன்ற தேர்தல் கால அட்டவணையை அறிவிப்பாணையாக வெளியிடுவதற்கான நடைமுறையையும் மத்திய அமைச்சரவை மேற்கொண்டது. மேலும் தேர்தல் கமிஷன் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து