முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
CPI 2024-03-18

Source: provided

சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி), திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என தேர்வு செய்யும் பணி கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக நடந்து வந்தன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து