முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்      அரசியல்
Anna-Arivalayam-1

சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்ற நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.  நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க. படுவேகமாக உள்ளது.  ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தி.மு.க. போட்டியிம் தொகுதிகள்:  

வடசென்னை,  தென்சென்னை,  மத்திய சென்னை, காஞ்சிபுரம் ( தனி),  அரக்கோணம்,  வேலூர்,  தருமபுரி,  திருவண்ணாமலை,  சேலம்,  கள்ளக்குறிச்சி,  நீலகிரி (தனி),  பொள்ளாச்சி,  கோவை,  தஞ்சாவூர்,  தூத்துக்குடி, தென்காசி (தனி),  ஸ்ரீபெரும்புதூர்,  பெரம்பலூர்,  தேனி,  ஈரோடு,  ஆரணி,

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை,  சிவகங்கை,  திருநெல்வேலி,  கிருஷ்ணகிரி,  கரூர்,  விருதுநகர்,  கன்னியாகுமரி,  புதுச்சேரி, 

மதி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்:

திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

மதுரை - சு. வெங்கடேசன், திண்டுக்கல் - சச்சிதானந்தன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

திருப்பூர் , நாகப்பட்டினம் (தனி)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

நாமக்கல் ( உதயசூரியன் சின்னம் )

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்:

ராமநாதபுரம் - நவாஸ் கனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து