முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக குஜராத்,  உத்தரப் பிரதேசம்,  பீகார்,  ஜார்க்கண்ட்,  இமாச்சலப் பிரதேசம்,  உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து