முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
Modi 2023-05-10

கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். கர்நாடகாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ள பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோட் ஷோவில் பங்கேற்று பிரசாரம் செய்தார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது இது முதல் முறையாகும்.

கோவை விமான நிலையம் வந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் சாய்பாபாகாலனிக்கு சென்றார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  திறந்த வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி ரோட் ஷோவில் பங்கேற்றார். பிரதமர் மோடியின் வாகனத்திலேயே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகனும் பயணித்தனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்பட்ட இந்த ரோட் ஷோ, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைந்தது. ரோட் ஷோ ஆரம்பம் முதல் முடியும் வரை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ரோட் ஷோ நிறைவடைந்த நிலையில் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து