முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
Anna-Arivalayam-1

சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. இதன்படி, நாமக்கல் தொகுதியானது கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (கொ.ம.தே.க.) ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரிய மூர்த்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். அவர், கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து