முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி குறித்து லக்னோ கேப்டன்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில்,

"இது வெறும் முதல் போட்டிதான். எனவே அதில் சந்தித்த தோல்வியைப் பற்றி நான் அதிகமாக சிந்தித்து ஆராயப் போவதில்லை. பவர் பிளே என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். முதல் சீசனில் மோஷின் கான் எங்களுடைய பவர் பிளே பவுலராக இருந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் பிட்டாக இல்லை. இம்முறை அவரும் நவீனும் சேர்ந்து மீண்டும் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்த இலக்கு எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பந்து வீசியும் சில தவறுகளை செய்தோம். அதிலிருந்து நாங்கள் பாடங்களையும் கற்றுள்ளோம். ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தும் நாங்கள் 194 ரன்களை நெருங்கியதே எங்களுடைய பேட்டிங் வரிசையின் தரத்தை பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். இங்கிருந்து நாங்கள் எப்படி வலுவாக மாற முடியும் என்பதை பற்றி பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

_____________________________________________

புள்ளி பட்டியலில் மாற்றம் 

இலங்கை - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. அதில் வங்காளதேசத்தை 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் கடைசி இடத்தில் இருந்த இலங்கை கிடுகிடுவென முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. 4-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்., 1. இந்தியா - 68.51 சதவீதம் , 2. ஆஸ்திரேலியா- 62.50 சதவீதம் , 3. நியூசிலாந்து - 50.00 சதவீதம் , 4. பாகிஸ்தான் -36.66 சதவீதம் , 5. வெஸ்ட் இண்டீஸ் - 33.33 சதவீதம் , 6. இலங்கை - 33.33 சதவீதம் , 7. வங்காளதேசம் - 33.33 சதவீதம் , 8. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம் , 9. இங்கிலாந்து - 17.5 சதவீதம் 

_____________________________________________

பாண்ட்யாவுக்கு கவாஸ்கர் கேள்வி?

ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது. குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர். பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

_____________________________________________

கமிந்து மெண்டிஸ் புதிய சாதனை

இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 7-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 102 ரன்கள் விளாசினார். தனஞ்ஜெயா டி சில்வா உடன் சேர்ந்து 202 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெயா டி சில்வாவும் (102) சதம் விளாசினார். 2-வது இன்னிங்சில் மீண்டும் தனஞ்ஜெயா டி சில்வா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த முறை 8-வது வீரராக களம் இறங்கிய 164 ரன்கள் விளாசினார். 

இந்த இன்னிங்சிலும் தனஞ்ஜெயா டி சில்வா (108) சதம் விளாசினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7-வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் தனஞ்ஜெயா டி சில்வா- கமிந்து மெண்டிஸ் ஆகிய இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கிரோக் சேப்பல்- கிரேக் சேப்பல், மிஸ்பா-உல்-ஹக்- அசார் அலி ஜோடி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

_____________________________________________

பாண்ட்யாவுக்கு லாரா யோசனை

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் வீசுவதற்காக வந்தபோது அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்டியா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு. கெவின் பீட்டர்சன்: "கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை. பிரையன் லாரா: "இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை இங்கே விளையாடும்போது" என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து