முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு

புதன்கிழமை, 27 மார்ச் 2024      உலகம்
Syria 2024-03-27

டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சிரியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈராக், சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. 

எனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நேற்று முன்தினம் இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதி, அவரது 2 பாதுகாவலர்கள், 9 ஈராக் கிளர்ச்சியாளர்கள் உள்பட  15 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 ராணுவ வீரர்கள், 13 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சிரிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ள நிலையில் சிரியாவின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து