முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Raja 2024-03-27

நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை கடந்த 20ம் தேதி முதல் தாக்கல் செய்துவரும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லோகேஷ், பா.ஜ.க. சார்பில் எல்.முருகன், நாம் தமிழர் ஆ.ஜெயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து