முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி

புதன்கிழமை, 27 மார்ச் 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர். இந்தநிலையில், சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ளது, இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. சிறையில் இருந்தபடியே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து