முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      இந்தியா
Savitri-Jindal-2024-03-28

புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடகப் பதிவில், 

ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, அவர் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து 84 வயதாகும் அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப் பெரிய பணக்காரராகவும் ஜிண்டால் இருந்து வருகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து