முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு,  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதையடுத்து,  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலினை  பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும்,  சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தன.  அந்த வகையில்,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.  இதே போல்,  தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட அமைப்பினர்,  சங்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து