முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பீகாரில் இண்டியா கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்பட்ட செய்தியை ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் மறுத்திருந்த சில நாட்களுக்குப் பின்னர் தற்போது இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்தில் தேஜ்ஸ்வி யாதவ் கலந்து கொண்டார். 

பின்னர் அவர், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் இணைந்து பீகாரில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பீகாரில்  முதல் கட்டமாக தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஏற்கெனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க இருக்கிறது. 

முன்னதாக பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஐக்கிய ஜனதா தளம் வசமுள்ள பூர்ணா மற்றும் ஹாஜிபூர் தொகுதிகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இது குறித்து ஆர்.ஜே.டி. பிரமுகர் ஒருவர் கூறுகையில், 

கதிஹார் தொகுதி குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. இடையே இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.  அதே போல் பூர்ணாவில் ஆர்.ஜே.டி. போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியும் அந்தத் தொகுதியை விரும்புகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து