முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Weather-Center 1

சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து  சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 01.04.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 

தென்தமிழகத்தில் 02.04.2024 மற்றும் 04.04.2024 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 02.04.2024 வரை  2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து