முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Radhakrishnan 2023 04 17

சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராதோருக்கு இன்று மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார், யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இரு வகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நோட்டீசை பெற்றுக் கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர். 

தேர்தல் பணி பயிற்சிக்கு வராதோருக்கு இன்று மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து