முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு : வெளியான அதிர்ச்சி தகவல்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Tuberculosis 2024-03-29

Source: provided

புதுடெல்லி : 2023 இந்திய காசநோய் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

இந்தியாவில்  காசநோய் என்பது கி.மு. 1500 இருந்து இருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.  இந்த நோயை ஒழிப்பதற்கான ‘தேசியக் காசநோய் ஒழிப்பு’ திட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.  இருப்பினும்,  ஒரு காலத்தில் ஏழைகளின் நோய் என்று அறியப்பட்ட காசநோய்,  தற்போது அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக மாறிவிட்டது.  இந்நிலையில்,  கடந்த ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக  ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., “கடந்த ஆண்டு இந்தியாவில் 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  1960-ஆம் ஆண்டுகளில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில்,  முதல் முறையாக 25.55 லட்சம் பேருக்கு மேல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

25.5 லட்சம் பேரில் 8.4 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியவந்தது.  காசநோயால் உயிரிழப்போரின் விகிதம் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 18 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு இந்திய காசநோய்  2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து