முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரன் ரூ.6,545-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..!

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனையானது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

சென்னையில் இந்த மாத த்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் நேற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தது.  நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 6500 ஆக இருந்த நிலையில் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6545க்கு விற்பனையானது.  நேற்று சவரன் ஒன்றுக்கு ரூ. 560 உயர்ந்து 52 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று மீண்டும் ரூ. 360 ரூபாய் உயர்ந்து ரூ. 52,360க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த தொடர் விலையேற்றம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது.  நேற்று முன்தினம் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று 1 ரூபாய் அதிகரித்து ரூ. 85க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து