முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுதிறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து