முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ன் முழு சூரிய கிரகணம் வெளிநாடுகளில் தெரிந்தது: அமெரிக்கர்கள் கண்டு ரசித்தனர்

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024      உலகம்
Solar-eclipse 2024-04-08

வாஷிங்டன், 2024-ல் வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நடந்தது. வெளிநாடுகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை அமெரிக்கர்கள் கண்டு ரசித்தனர்.

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கும் போது,அது பூமியில் ஒரு நிழலை ஏற்படுத்துகிறது. பூமியின் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

நேற்று ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் நடந்தது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்கள் இருந்தது. சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பலருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த முறை அமெரிக்கர்களுக்கு அதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. ஜோதிடத்தில் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா இடையே 185 கிலோமீட்டர் நீளம் முழுவதும் வானம் இருளில் மூழ்கியது. 18 வெவ்வேறு அமெரிக்க மாகாணங்களில் இருந்து இதைப் பார்க்க முடிந்தது . இருப்பினும், இந்தியாவில் உள்ள வான கண்காணிப்பாளர்களுக்கு இது கண்களில் புலப்படவில்லை.

இந்திய நேரப்படி (IST), முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 அன்று இரவு 9:12 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 9, அதிகாலை 2:22 மணிக்கு முடிந்தது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையானது முதன்முதலில் காலை 11:07க்கு சூரிய கிரகணத்தை அனுபவித்தது. அமெரிக்கா, மெச்சிகோவில் ஒரு வைர வளையம் போல சூரிய கிரகணம் நிகழத் தொடங்கி உச்சமடைந்தது. ஏராளமானோர், சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்ததோடு, புகைப்படம், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் அமெரிக்காவில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை பகிர்ந்துள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க். அமெரிக்கர்கள் பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து