முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: களத்தில் மொத்தம் 1,206 வேட்பாளர்கள்

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, பார்லி. தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் மாநிலங்களில் மொத்தம் 1,206 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இம்மாதம் 19-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம்(5), பிகார்(5), சத்தீஸ்கர்(3), ஜம்மு-காஷ்மீர்(1), கர்நாடகா(14), கேரளா(20), மத்திய பிரதேசம்(7), உத்தர பிரதேசம்(8), மகாராஷ்டிரம்(8), ராஜஸ்தான்(13), திரிபுரா(1), மேற்கு வங்கம்(3) ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று முன்தினம் (ஏப். 8) கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 12 மாநிலங்களில் மொத்தம் 1,206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 2,633 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவை சரிபார்க்கப்பட்டு இறுதியாக 1,428 வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 500 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 491 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக திரிபுராவில் 14 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இம்மாதம் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து