முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சாசனத்தை அழிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு பிரச்சாரம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      இந்தியா
Jairam-Ramesh- 2023-06--01

Source: provided

புதுடெல்லி : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்த மக்களவைத் தேர்தல் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பான அரசியலமைப்பைக் காப்பது மற்றும் பாதுக்காப்பதற்கானது என்றும் தெரிவித்துள்ளது.

அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

அம்பேத்கரின் மகத்தான பாரம்பாரியம் மற்றும் பங்களிப்பான இந்திய அரசியலமைப்பை அகற்றுவதற்கான அழைப்புகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. சந்தேகத்துக்கு இடமின்றி இதுவேறு யாருமில்லாமல் நமது பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியேயாகும்.  இதற்கான உபாயம் மிகவும் எளிமையானது, ஆனால் முழுவதும் பாசாங்கு நிறைந்தது. அரசியல் அமைப்பை குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், அரசியலமைப்பின் மரபை நிலைநிறுத்தும் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டே அதனை மாற்ற வேண்டும் என்று முரசறைந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த 2024 மக்களவைத் தேர்தலின் அடிப்படை ஒன்றுதான். டாக்டர் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அதன் மதிப்புகள் மற்றும் அதன் அடிப்படைகளை அப்படியே பாதுக்காப்பதே என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து