முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7-வது சுற்றில் குகேஷ் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

டொராண்டோ : பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இந்த ஆட்டம்41-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு இந்தியகிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார்.

இதில் 40-வது காய் நகர்த்தலின் போது அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றிபெற்றார். இந்தியாவின் விதித் குஜராத்தி, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ் மோதிய ஆட்டம் 51-வது காய் நகர்த்தலின் போதுடிராவில் முடிவடைந்தது. ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா ஆகியோர் மோதிய ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். விதித் குஜராத்தி, ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் உள்ளனர். அலிரேசா ஃபிரோஸ்ஜா 2.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அபாசோவ் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் பிரிவில் 7-வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் லிங்ஜீ லியிடம் 36-வது காய் நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான கொனேரு ஹம்பி, உக்ரைனின் அன்னாமுசிசுக் மோதிய ஆட்டம் 40-வது காய்நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து