முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நடப்பு ஆண்டு சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
India-Meteorological 2022

புதுடெல்லி, நடப்பு ஆண்டில் இந்தியாவில் சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாகவும், நீண்ட கால சராசரி 87 செ.மீ என்றளவிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தின் ஆரம்பப் பகுதியில் எல் நினோ காலநிலை நிகழ்வு வலுவிழக்கும், அதேவேளையில் ஏற்கெனவே பலமிழந்திருந்த லா நினா காலநிலை நிலவரம் வளர்ச்சி பெரும்போது பருவமழைக்கு உதவியாக இருக்கும். இதனால் பருவமழை சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 22 எல் நினோ ஆண்டுகளில், பெரும்பாலானவற்றில் இந்தியாவில் சராசரி அல்லது அதற்கு அதிகமான அளவே பருவமழை பெய்துள்ளது. 1974 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் மட்டுமே இது பொய்த்து சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளது என்று ஐஎம்டி மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. இது தென் மேற்கு பருவமழையினுடன் நேரெதிர் தொடர்பைக் கொண்டுள்ளது. அதனால் சராசரிக்கு அதிகமான பருவமழை பொழிவுக்கு வாய்ப்புள்ளது என ஐஎம்டி விளக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து