முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணிக்கு எதிராக டோனி படைத்த 3 சாதனைகள்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எம்.எஸ்.டோனி வான்கடே மைதானத்தில் 3சாதனைகளை படைத்துள்ளார்.

பந்துவீச்சு தேர்வு...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ருதுராஜ் - துபே...

இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருந்தனர்.  ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.  38 பந்துகளில் 66ரன்கள் எடுத்த அவர் 10 பவுண்டிரிகள் மற்றும் 2சிக்ஸர்கள் விளாசினார்.  இறுதி ஓவரில் ஷிவம் துபேயுடன் கைகோர்த்த எம்.எஸ்.டோனி முதல் 3 பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 4பந்துகளில் 20 விளாசிய டோனியின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ராஜ விருந்துதான்.

2-வது வீரர் ஆனார்...

இந்த போட்டியில் எம்.எஸ்.டோனி 20 ரன்கள் எடுத்ததின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக 5000ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்கிற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா 200 போட்டிகளில் விளையாடி 5129 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் 5000ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்கிற சாதனையையும் எம்.எஸ்.டோனி படைத்துள்ளார்.  இதுவரை விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 8006 ரன்களும் , ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5470 ரன்களும் , சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 5529 ரன்களும் குவித்துள்ளனர்.

அதிக போட்டிகள்... 

அதேபோல டோனி இப்போட்டியில் இன்னொரு மிக முக்கியமான சாதனையையும் சத்தமில்லாமல் படைத்துள்ளார். அதாவது இதுவரை ஒரே அணிக்காக அதிக போட்டிகள் விளையாடியவர் என்கிற சாதனையை கையில் வைத்திருப்பவர் ஆர்சிபி அணி வீரரான விராட் கோலி. அவர் ஆர்சிபி அணிக்காக இதுவரை 258போட்டிகள் விளையாடியுள்ளார். இந்த நிலையில் எம்.எஸ்.டோனிக்கு 250வது போட்டியாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர் என்கிற சாதனையை டோனி படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து