முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம் ரூ.6,870-க்கு விற்பனை: ரூ. 55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.54,960க்கு விற்பனையானது. விரைவில் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில்,  தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50,000 கடந்தது.  தொடர்ந்து அதிகரித்து வரும் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில், ஏப். 14 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனையானது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்பட நிலையில், நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500 ஆக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து