முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      இந்தியா      அரசியல்
Mayor-Vikram 2024-04-19

சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில், அந்நகரின் மேயர் விக்ரம் ஆகே காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத்துக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விக்ரம் ஆகே காங்கிரசில் இருந்து  சமீபத்தில் விலகி பா.ஜ.க.வில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக ஆகே வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், 

சமீபத்தில் நான் அரசியல் கட்சி ஒன்றில் (பா.ஜ.க) இணைந்த பின்பு அசவுகரியமாக உணர்கிறேன். சிந்த்வாராவில் வளர்ச்சியை உருவாக்கிய மனிதருக்கு நான் சரியானதைச் செய்யவில்லை என்று எண்ணுகிறேன். கல்வித் துறையாக இருந்தாலும், மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பதாகட்டும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதாகட்டும் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

எதிர்காலத்தில் அரசியலில் நிறைய செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, என்றாலும் இன்று நான் எனது தலைவர் கமல்நாத் மற்றும் நகுல் நாத்துடன் நிற்கவில்லை என்றால், அவர்கள் எனக்கு நிறையச் செய்திருக்கிறார்கள். 

வாக்காளர்கள் கமல்நாத்துக்கு வாக்களித்து அவரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை நான் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து