முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பயிற்சியின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      உலகம்
Japan 2024-04-21

Source: provided

டோக்கியோ : ஜபபானில் பயிற்சியின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் நேற்று முன்தினம் இரவு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கில் டோரிஷிமான் தீவில் இருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நடைபெற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த 2 ஹெலிகாப்டர்களிலும் தலா 4 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ள 7 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து