முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      விளையாட்டு
Bangalur 2024-04-29

Source: provided

அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

45வது லீக் ஆட்டம்...

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 16 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ரன் குவிப்பிற்கு... 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த மைதானம் ரன் குவிப்பிற்கு ஏற்ற மைதானம் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் முதலில் பந்துவீசும் போது 200 ரன்களை விட்டுக் கொடுத்தும் எங்களால் அதை சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை 16 ஓவர்களில் இவ்வளவு விரைவாக முடிப்போம் என்று நினைக்கவில்லை.

சிறப்பாக செயல்பட்டு... 

இருந்தாலும் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் நல்ல நம்பிக்கையுடன் விளையாடி வருகிறோம். எங்களது அணியின் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விசயம் அப்படி அல்ல...

இந்த ஸ்கோரை பார்க்கும்போது பவுலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்கத் தோன்றும் ஆனால் விசயம் அப்படி அல்ல. டி20 கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. குறிப்பாக தற்போதெல்லாம் 220 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் அது வெற்றிக்கான ஸ்கோராக உள்ளது. இந்த ஆட்டத்தில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சரியாக வெளிப்படுத்த... 

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியில் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தனர். அடுத்த போட்டியில் நாங்கள் இன்னும் சிறப்பான ஒரு திட்டத்துடன் வரவேண்டும். மேலும் மைதானத்தில் எங்களுடைய திட்டங்களை சரியாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கு திரும்ப முடியும்.

கூடுதலாக ரன் அடிக்க...

எப்போது பேட்டிங் செய்தாலும் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடிக்க நினைக்க வேண்டும். ஏனெனில் தற்போது வெற்றிக்கான ஸ்கோர் அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் 200 ரன்களை நாங்கள் எடுத்தபோது நிச்சயம் இந்த ரன் குவிப்பு போதும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் எங்கள் வசம் எதுவும் செல்லவில்லை. பெங்களூரு அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து