முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 2 மே 2024      உலகம்
Colombia 2024-05-02

Source: provided

பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின்  தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. 

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறி உள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.

இந்த நிலையில்,இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

காசா மீதான போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் பெட்ரோ, கடந்த அக்டோபர் மாதம்  இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிலிருந்து, இஸ்ரேல் - கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து