முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொலி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா மனு தாக்கல் செய்தார்.

கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது என்று கூறி இம்மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், “தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால், வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும்.

விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏன் நீதிமன்றத்தை அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? ஒருவர் அவரை (அர்விந்த் கெஜ்ரிவால்) விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். நீதிமன்றம் சட்டமுறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து