முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
IIT 2023 03 14

Source: provided

சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக  வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 2024க்குள் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும்,  குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் குழுவின் நிறுவனருமான தீரஜ் சிங் தாக்கல் செய்த ஆர்டிஐ மூலம்  தெரிய வந்துள்ளது.  இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவற்றில் 98 இறப்புகள் கல்வி வளாகத்தில் நிகழ்ந்தவை.  இதில் 56 பேர் தூக்கிலிட்டு இறந்தனர். 17 பேர் வளாகத்திற்கு வெளியே இறந்துள்ளனர்.

அவர் தாக்கல் செய்த தரவுகளின்படி 2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் மெட்ராஸில் ஐஐடியில் அதிகபட்சமாக 26 பேரும்,  கான்பூர் ஐஐடியில் 18 பேரும் இறந்துள்ளனர். கராக்பூரில் 13 பேரும்,  மும்பை ஐஐடியில் 10 பேரும் இறந்துள்ளனர்.  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 12, 2023 அன்று மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணம் தான் கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி மாணவர்களின் இறப்புகள் குறித்த தரவுகளைக் சேகரிக்க தீரஜ் சிங்கை தூண்டியுள்ளது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து