முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி

வியாழக்கிழமை, 2 மே 2024      விளையாட்டு
2-Ram-53

Source: provided

சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

பஞ்சாப் பந்துவீச்சு...

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

எளிய இலக்கை... 

ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார். பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் ஷர்துல் தாக்கூர், கிளீசன் மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தோல்வி குறித்து...

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில்  இன்னும் இந்த போட்டியில் 50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் கூடுதலாக குவித்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இருப்பினும் இந்த போட்டியில் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் இந்த இலக்கு நிச்சயம் குறைவுதான்.

டாஸ் சாதகமாக...

நான் டாஸ் போடுவதை பிராக்டிஸ் செய்தாலும் எனக்கு சாதகமாக அமையவில்லை. போட்டிகளில் விளையாடுவதை விட டாஸ் போடும்போது எனக்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது. கடந்த போட்டியில் நாங்கள் 78 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றிருந்தோம். அதேபோன்று இந்த போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும். எங்களது அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியது எங்களுக்கு பின்னடைவை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல் முறையாக அவுட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து