முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி

வியாழக்கிழமை, 2 மே 2024      விளையாட்டு
Gaikwat 2023-12-22

Source: provided

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்தார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.

இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார். சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

கனடாவின் அணி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதுதான் கனடாவின் முதல் டி20 உலகக் கோப்பை ஆகும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா உடன் கனடாவும் இருக்கின்றன.

ஆல்ரவுண்டர் சாத் பின் ஜாஃபர் கனடாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் பயிற்சியாளர் முன்னாள் இலங்கை வீரர் புபுடு தாஸ்சனநாயகே ஆவார். ஜுன் 1இல் கனடா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 15 பேர் கொண்ட கனடா அணி:சாத் பின் ஜாஃபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், டிலோன் ஹெய்லிகர், தில்ப்ரீட் பஜ்வா, ஹார்ஷ் தாகேர், ஜெரிமி கார்டோன், ஜுனாய்த் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் டக்கூர், நவ்னீத் தலிவால், நிகோலஸ் கிர்டோன், பரகத் சிங், ரவீந்திரபால் சிங், ராயன்கான் பதான், ஸ்ரேயாஷ் மோவ்வா. ரிசர்வ் வீரர்கள்: ஆதித்யா வரதராஜன், அம்மர் காலித், ஜடிந்தர் மதரு, பர்வீன்குமார். டிராவலிங் ரிசர்வ்: தஜிந்தர் சிங்,

தீபக் சஹாருக்கு காயமா? 

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணிக்காக முதல் ஓவரை வீச வந்த தீபக் சஹார் 2 பந்துகளை மட்டுமே வீசினார். மூன்றாவது பந்து வீசுவதற்கு முன்பு அவருக்கு அசௌகரியம் ஏற்பட அவர் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில், தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹாருக்கு பெரிதாக காயம் ஏற்பட்டுள்ளது போல தெரியவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்த பிறகு அவருக்கு காயம் ஏற்படுள்ளதாக எனத் தெரிய வரும். தொடர்ச்சியாக அவரது கிரிக்கெட் பயணம் பிஸியாக இருக்கிறது. முதற்கட்டமாக அவரை பரிசோதித்ததில் அவர் நன்றாக உணரவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் எந்த அளவுக்கு நலமுடன் இருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.

போபண்ணா ஜோடி தோல்வி

மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தோல்வியடைந்தது. ஸ்பெயினில் ஏ.டி.பி., மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன் ஜோடியை எதிர்கொண்டது.

'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 5-7 என போராடி கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய போபண்ணா, எப்டன் ஜோடி 6-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

காலிறுதியில் ராமநாதன் ஜோடி 

சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது. சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தைவானின் ரே ஹோ ஜோடி, இத்தாலியின் பெலுச்சி, துனிஷியாவின் மோயஸ் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை ராமநாதன் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, 6-2 என வசப்படுத்தியது. 55 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன், ரே ஹோ ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

ஓமன் அணி அறிவிப்பு

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஓமன் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்த அணிக்கு அகிப் இலியாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓமன் அணி விவரம் பின்வருமாறு:- அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது. ரிசர்வ் வீரர்கள்: ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா, சுப்யான் மெஹ்மூத், ஜேய் ஒடெட்ரா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து