முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியாவிற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து, சவுதி அரேபியாவின் தமாம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அந்தப் பயணிகளின் வசதிக்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், இதை போல் பாங்காக்கில் இருந்து சென்னைக்கும், இரண்டு விமான சேவைகளை புதிதாக, கடந்த 15-ம் தேதியில் இருந்து, இயக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.அதே போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சவுதி அரேபியாவின் தமாமிற்கு, சென்னை யில் இருந்தும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே, இரண்டு விமான சேவைகளை, வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது. 

இந்த விமான சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயங்கத் தொடங்குகிறது. இதே போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதே போல் துர்காப்பூரில் இருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16-ம் தேதி தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இயக்கும் இந்த புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 

சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புதிய நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து