முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டுபாளையம் விமர்சனம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      சினிமா
Dandupalayam-Review 2024-06

Source: provided

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த தண்டுபாளையம் கூட்டத்தினர், தற்போதும் தங்களது கைவரியை பல இடங்களில் காட்டி வருவதும், அவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களை எச்சரிக்கும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் தங்களது கூட்டத்துடன் காவல்துறை அதிகாரியான டைகர் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தாரை கொடூரமாக கொலை செய்கிறார்கள். எதற்காக அவர்கள் இந்த கொலைகளை செய்தார்கள், அவர்களின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.

தண்டுபாளையம் கூட்டத்தின் குற்ற செயல்களை மையப்படுத்திய படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், முதல் நேரடி தமிழ்ப்படமான இதில், பழைய படங்களின் காட்சிகள் சில சேர்க்கப்பட்டிருந்தாலும், அவற்றுடன் தற்போதைய காட்சிகளை இயக்குநர் மிக நேர்த்தியாக இணைத்திருக்கிறார்.

வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் சவாலான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். 

மொத்தத்தில், இந்த ‘தண்டுபாளையம்’ மரணமாஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து