முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ வழக்கில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? கர்நாடக மாநில அமைச்சர் விளக்கம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Jail 2024-05-01

Source: provided

பெங்களூரு:போக்சோ வழக்கில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என்பது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் பரமேஷ்வரா விளக்கமளித்துள்ளார்.

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், கடந்த மார்ச் 14ம் தேதி அன்று சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு, பின்னர் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே எடியூரப்பா, தனது வழக்கறிஞர்கள் மூலம் சி.ஐ.டி. முன் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கோரியுள்ளார்.

இந்த சம்மன் அனுப்பப்பட்ட சில மணி நேரங்களிலேயே எடியூரப்பா, இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி அம்மாநில ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, கடந்த மாதம் புகார் அளித்த சிறுமியின் தாய் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா பதில் அளித்தார். இது தொடர்பாக ஜி.பரமேஷ்வரா கூறியதாவது:- நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள். எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள். இவ்வாறு ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து