முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Kannathasan 2024-06-24

Source: provided

சென்னை : கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.

முத்தையா என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் கண்ணதாசன் 1927-ம் ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருப்பது கண்ணதாசன் பாடல்கள் ஆகும்.

இந்த நிலையில், கவிஞர் கண்ணதாசனின் 97-வது பிறந்தாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராய நகர் கோபதி நாராயண சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணதாசன் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து