முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் சேகர்பாபு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை :  ஜெய் ஸ்ரீராம் என்றாலும் ஏற்றுக்கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம் என்றும், பழனியில் வரும் 24,25-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில்  மத்திய இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, 

பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் வரும் 24,25-ல் அனைத்துலக முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.6 கோடி வழங்கப்படவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக ஒவ்வொரு ஷிப்டிலும் 1,200 காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். 

மாநாடு நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்காக இலவச பேருந்து வசதி, கழிவறை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் வரவுள்ளனர்.

150 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சிறந்த கட்டுரைக்கு பரிசு வழங்கப்படும்.  முருக பக்தர்கள் மாநாடு என்பதால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரலாம். இதையே வரவேற்பாக ஏற்று எல்.முருகன் பங்கேற்கலாம். 

இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழகத்தில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் தி.மு.க. அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம். 

கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக் கொள்வோம். முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து