முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் பேச வாய்ப்பை கிடையாது: காஷ்மீரில் அமித்ஷா பேச்சு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

ஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநிலத்தில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்காது. 

காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன சேர்ந்து மீண்டும் மாநிலத்தை ஊழல் சகாப்தத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. இங்கு பழைய நடைமுறைகளை கொண்டு வருவோம் என்கின்றனர். சுயாட்சி கொண்டு வருவது குறித்து பேசுகின்றனர். காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து எந்த சக்தியாலும் பேச முடியாது. மாநிலத்தில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு தான், லோக்சபா தேர்தலில் அதிக மக்கள் ஓட்டு போட்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து