முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மாநிலம் கான்பூரில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா
UP 2024-09-09

Source: provided

கான்பூர் : உ.பி. கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரயில் மோதியுள்ளது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் தப்பினர்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து அரியானா மாநிலம் பிவானி நோக்கி காளிந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, கான்பூருக்கு அருகே சிவராஜ்பூர் பகுதியில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும், ரயிலின் என்ஜின் சிலிண்டரை மோதி தண்டவாளத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது. ரயில் மோதியதும் சிலிண்டர் வெடிக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டவுடன், கான்பூர் காவல்துறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு சார்பில் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், முக்கிய தண்டவாள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து